உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Tuesday, January 18, 2011

தமிழ்ப் புத்தாண்டு


எத்துனை செழிய பண்பாடு - தமிழா
அதை காக்க சிறிது பாடுபடு
ஆரிய தாக்கம் இருப்பதால் - ஏனோ
நமக்குள்ளே சில முரண்பாடு

ஆங்கில அறிவு தவறில்லை அதற்க்கு
தமிழைக் கைவிடுவது முறையில்லை
நடைமுறைக்கு ஏற்றுக் கொள்கிறோம்
சில மாற்றங்கள்
ஆனால் மாற்றப்படலாமோ நம் உணர்வுகள்

ஆரியரையும் அந்நியர்களையும் கூட
அழியாப் புகழில் தள்ளியது
நம் தாய் மொழி
தமிழ் வளர்க்க இன்னும்
புலப்படவில்லை ஒருவழி

அரிய தமிழ்ச் சொற்க்கள் அழிந்ததோ
எத்தனை எத்தனை
அம்மா என்று அழைப்பது கூட
இன்றைய நடைமுறையில் அழிகிறது

பாலுட்டிய அன்னையும்
சீர்படுத்திய தந்தையும்
சிதைந்த ஓவியங்களாய் முதியோரில்லத்தில்
நம் பண்பாட்டை நாமே மறக்கலாமா
அந்நிய மோகத்தில் திலைத்துக் கிடக்கலாமா

வாழ்த்துவதும் வரவேற்ப்பதும்
அமிழ்தென்றால் கூட பகிர்ந்துன்பதல்லவோ
நம் பண்பாடு
இவை மறந்ததாலின்று தமிழகத்தில்
கேட்கிறது சில கூப்பாடு

மன்றம் வைத்து வளர்த்த மொழி
சிதைக்கபடும் போதும் அழிக்கப்படும் போதும்
வேடிக்கை பார்க்க நாமென்ன
மரக்கட்டைகளா இல்லை
மண்ணுருண்டைகளா

அறம் செய்து நெறியோடு வாழ்ந்த வீரனே
உடனே புறப்படு
உலகின் முதற்குடி நீயென்பதை உறுதி செய்
செந்தமிழின் சிறப்பினை உலகறியச்செய்
ஒன்றே முக்கால் அடியில் உலகைப்பார்தவன்
உன் இனமன்றோ

கதிரவனுக்கு நன்றி சொல்லும் நன்னலே
தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததென்று கூறும் திருநாளே
வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்
மண்ணோடு கலந்தாலும் தமிழ்
நம்மோடு கலந்திருக்கட்டும்