காலைத் தென்றலில் கலந்திருந்த
உன் மணம் எழுப்பியது
உறங்கிக்கொண்டிருந்த
என் உயிர் தொட்டு - பார்த்தால்
அளவில்லா மலர்களை அள்ளிச்
சூடிக்கொண்டு அமைதியாய்
என் கண்முன்னே நீ
மாலை நீ சூடிய மல்லியில்
தேனெடுக்க
உன்னையே சுற்றிச் சுற்றி வந்த
வண்டின் ரீங்காரம்
இரெவெல்லாம்
காதுகளுக்குத் தேன் மதுரமாய்
ஓலைகளில் மாளிகை கட்டிக்
குடியேரியச் சிட்டுக்கள்
விடியலுக்கு முன் இறைதேடிச் செல்ல
விழித்தேன் உன் எதிரில்
இரெவெல்லாம் இளவரசியாய் இருந்தவள்
உதிரத்தொடிங்கினால் விடியலை எதிர்பார்த்து
அவளுக்கு மேல்
பனிநீரில் இரவெல்லாம் குளித்து விட்டு
மாலைப் பொழுதை எதிர் பார்த்து
மலர்வதர்க்காக ஒரு மொட்டு
No comments:
Post a Comment