உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Monday, January 27, 2014

சமூக வலைதளங்களின் ஆபத்து

மனித உறவுகளின் தொடர்பை மேம்படுத்துவதற்காக வந்த சமூக வலைதளங்கள், இன்று பல் வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக கூறப்படு கிறது. அந்தரங்க விஷயங்களை நிமிடத்துக்கு நிமிடம் சமூக வலை தளங்களில் பகிர்வதால் ஏற்படக் கூடிய விபரீத பின்விளைவுகளைப் பற்றி நம்மில் பலரும் சிந்தித்ததாக தெரியவில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் பரிதாபமான முடிவு.
சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததற்குகூட அவரது ட்விட்டர் பக்கத் தில் நடந்த சண்டைச் சச்சரவு களைத்தான் காரணமாக சொல் கிறார்கள். இது ஒருபுறமிருக்க பேஸ் புக்கில் சிலர் தங்களது அன்றாட நடவடிக்கைகளைகூட ஸ்டேட்ட ஸாக போட்டு வருகிறார்கள். சில வசதியான இளைஞர்கள், அப்பா விலையுயர்ந்த கார் பரிசளித் தார், ஐ-போன் வாங்கித்தந்தார்.. என்பது போன்ற ஸ்டேட்டஸ்களை போடுவதை வழக்கமாக வைத்துள் ளார்கள். இதை கவனிக்கும் சிலர் சம்பந்தப்பட்ட நபரை கடத்தி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த சித்ரா (பெயர் மாற்றப்பட் டுள்ளது) என்ற பெண், வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந் தார். போலீஸ் விசாரணையில், ‘நான் வீட்டில் தனியாக இருக்கிறேன்’ என்ற அவரது ஸ்டேட்டஸை பார்த்த அவரது பேஸ் புக் நண்பர்கள் இருவர் வீட்டுக்கே வந்து அவரை பலாத்காரம் செய்து கொலை செய்தது வெளிச்சமானது.
மேலும் வேலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை பல மாதங்களாக காதலித்தார்.
காதலி கேட்டபோதெல்லாம் ஆயிரக்கணக்கில் பணத்தையும் வாரி இறைத்தார். நேரில் சந்திக்க வேண்டுமென்று அந்த இளைஞர் கேட்க, ஒரு சில நாட்களில் அந்த பெண்ணின் ஐ.டி.யே மாயமானது. இதில் மன உளைச்சல் அடைந்த அந்த இளைஞர் தற்கொலை வரை சென்று மீண்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து சைபர் கிரைம் குற்றப்பிரிவின் முன் னாள் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். பாலு கூறுகையில், “பேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்துபவர்கள் முன் பின் தெரியாதவர்களை நண்ப ராக்கி கொள்ளக்கூடாது. தெரிந்த வரிடமிருந்து நட்பு வேண்டுகோள் வந்தாலும், அந்த பக்கம் உண்மையி லேயே அவருடையது தானா என்ப தையும் சோதிக்க வேண்டும். முக் கியமாக ஸ்டேட்டஸ் போடும்போது கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.
2012-ம் ஆண்டின் கணக்கெடுப் பின்படி சமூக வலைதளங்களில் 147 கோடி பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை 2013-ம் ஆண்டின் இறுதியில் 173 கோடியாக உயர்ந்திருக்கிறது. உலகில் நான்கில் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவ தாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
முழுக்க முழுக்க மனித உறவை யும், தொடர்பையும் மேம்படுத்து வதற்காக வந்ததாக சொல்லப்படு கிறது. ஆனால் கடந்த கால சம்பவங் கள் சிலவற்றை வைத்து பார்க்கும் போது சமூக வலைதளங்களால் பிரச்சினைகளே அதிகம் என்பது உறுதியாகிறது.

Thursday, January 23, 2014

2005க்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து உரூபாய் தாள்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது

வரும் மார்ச் 31க்குப் பிறகு, 2005க்கு முன் வெளியிடப்பட்ட அனைத்து உரூபாய் தாள்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது. கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளை கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதன் படி இந்த உரூபாய் தாள்களை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த வசதி தொடரும் என ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005க்கு முன் வெளியான உரூபாய் தாள்களின் பின்பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு விவரம் இருக்காது.
2005க்குப் பிறகு வெளியிடப்பட்ட உரூபாய் தாள்களின் பின்பக்கத்தில் கீழ்பகுதியின் நடுவில் சிறிய வடிவில் கண்ணுக்குத் தெரியும்படி அச்சிடப்பட்ட ஆண்டின் விவரம் இருக்கும். இதை வைத்து அந்த உரூபாய் தாள்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் இத்ற்க்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

Tuesday, January 21, 2014

அழிவில்லாதவன்



பறையில் அடிவாங்கிய கண்ணீர் துளிகள்
வெட்டியானின் கண்ணீரோடு புதைக்கப்பட்ட குழி
மனக்குமுரளோடு கட்டிய மாலைகள்
புதைக்கப்படும் வரை பசியாரா ஊர்மக்கள்
இன்னும் சொல்ல வேண்டுமா
இறந்தது யாரென்று