உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Thursday, February 21, 2008

கடுதாசி வந்திருக்கு

கடுதாசி வந்திருக்கு
கருப்பாயி மவளுக்கு
பிரிச்சி படிக்க நெனச்சாலும்
ஒதுங்கனதில்ல பள்ளிக்குட ஓரம்
எதை எதையோ படிக்கறன்னு
சொல்லுவாலே மவ அடிக்கடி
எப்ப வருவா புள்ள
படிச்சு சொல்ல

சமஞ்ச உடனே பரிசம்போட்ட மாமனுக்கு
ஒத்தையா பெத்து எடுத்தா
இந்த பொண்ண
பொட்டப் புள்ள பொறந்திடுச்சுன்னு
கள்ளிப்பால அவன் தேட
எப்படியோ காப்பாதிட்டா
எல்லோரையும் எதுத்துகிட்டு

பள்ளிக்கூடம் சேக்கறதுக்கு
இவ என்ன பாடுபட்டிருப்பா
அடுப்படியில வெந்தாலும்
மவள ஆளாக்கி பாக்க நெனச்சிப்புட்டா
பொட்டப்புள்ளக்கி படிப்பெதுக்குடீன்னு
புருசங்காரன் கேட்டப்ப
வீராப்பா போய் சேத்தா மவ
பெரிய படிப்பு படிக்கனுமுன்னு

ஆத்தா பேர காப்பாத்தி
நல்லா மவ படிக்கறான்னு
வாத்தியாரு வந்து சொன்னப்ப
வயிரு குளுந்து சந்தோசப்பட்டா
சந்தோசத்துல சங்கடமா
கட்டனவன் போயிட்டான் கடவுள்கிட்ட
அப்பனாவும் இவயிருந்து
காப்பாத்துரா புள்ளய

சீமைக்கு போய் படிக்கனும்முன்னு
செல்லக்குட்டிக்கு ஆசப்பட
கட்டட வேலக்கி போறா
கழினி வேல இல்லாதப்ப
சிந்தர வேர்வைக்கு கூலியா
சலிக்காம மவ படிக்கரா
வெளிச்சம் இல்லன்னு சொல்லாம
புள்ள வெளக்கு வச்சி படிக்கரா

பள்ளிக்கூடத்துல மொத வந்தான்னு
வாத்தியாரு கூட்டாரு
போனவள ஒக்காத்திவச்சி
என்னென்னமோ சொன்னாங்க
சொன்னது எதுவும் புரியாம
செலயாட்டம் தலையாட்டி
பட்டணத்துக்கு அனுப்பி வச்சா
பரிச்ச எழுத புள்ளய

எழிதிட்டு வந்த பத்து நாள்ல
வந்திருச்சி கடுதாசி
பாவி மவளும் வந்துப்புட்டா
படிச்சு சொல்லக் குடுத்தேன்
மல்லிப்பூ பூத்தமாரி
சிரிச்ச புள்ளய பாத்தப்ப
சந்தோசமான சேதிதான்னு
புரிஞ்சிருச்சி நெஞ்சிக்கு

வானத்தப்பத்தி படிக்க எழிதிட்டு வந்த
பரிச்சயில மொத வந்துட்டன்னு
கடுதாசி வந்துருக்காத்தா
வானத்தி பத்தி மட்டும் இல்ல தாயி
அத தாண்டி கூட என்ன இருக்குன்னு
படிச்சிட்டு வா போயி
ஆத்தா கழனிக்கு போய்வரேன் புள்ள
கதிரருக்க நேரமாச்சு...

No comments: