உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Thursday, February 21, 2008

என் தோழி

உனக்கும், எனக்கும் இடையே
ஓடும் நம் உறவு பற்றி
சிறிது நேரம் அசைபோட்டு
செதுக்கிய என் நினைவுகள்.
கல்லூரி வகுப்பினிலே
நீ ஒரு பிரிவு. நான் ஒரு பிரிவு
ஆங்கிலம் என்ற ஒன்றால்
பிறந்தது நம் உறவு.

முன் இருக்கையில் முனைப்புடன் நீ
கல்வி கற்க
பின் இருக்கையில் விளையாட்டாய் நான்
அமர்ந்திருக்க
சந்தேகம் வரும் பொழுது சிரித்துக் கொண்டே உன்
முன் நிற்க
சலிக்காமல் அவற்றை தினந்தோறும் நீ
தீர்த்து வைக்க
காற்றில் மணமாய் கனியில் சுவையாய்
நட்பில் கலந்திருந்தேன்
சஞ்சலங்கள், சங்கடங்கள்
ஆழ்ந்து என்னை வதைக்கையில்
வடிகாலாய் வந்தாய் நீ.
மனம் வார்த்தைகள் சிந்தும்பொழுது
செவி சாய்த்தாய் நீ.
தனிமையை உணரும் பொழுது நான்
துணையாய் நினைத்தவர்களில் ஒருவள் நீ.
"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு"
ஆண் பெண் உறவு என்றாலே
சலனம் தான் பார்ப்பவர் கண்களுக்கு
சில நேரம்
பழகுவோர் கண்களுக்கும்
பார்ப்பவர் கண்களுக்கும் திரையிட முடியாது.
பழகுவோர் நெஞ்சத்தில் கறைபடக் கூடாது.
"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்"
மாறாமல் பழகக் கற்றுக் கொடுத்த
என் பெருமைக்குரிய
பெண் தோழிகளின் வரிசையில்
மலர்ந்து மனம் வீசும் இரண்டாமவள் நீ!
ஆண்கள் பள்ளிகளிலேயே படித்துவிட்டு
கல்லூரி வாழ்க்கையில் நான் நுழைந்த பொழுது
தன்னை அறியாமல் என்னுள் முதலில்
களை எடுத்தவள்
கன்னிச்செல்வி - என் முதல் (முதன்மைத்) தோழி!

பின் ஆயிரம் பேர் வந்தாலும்
என் மனதில் ஏனோ
அடுத்த இடத்தில் நீ தான்
என்னைப் பற்றி நீ
என்ன நினைத்தாய்? நினைக்கிறாய்? நினைப்பாய்?
தெரியவில்லை தேவைப்படவும் இல்லை எனக்கு.
ம்றவு பற்றி பலர் என்ன பேசினார்கள்.
நான் கண்டுகொள்ளவில்லை.
கவலைப்படவும் இல்லை.
நம் மனதில் நாம் அளிக்கும் மதிப்பு - நட்பு
"நிறைநீர நீரவர் கேண்மை"
வகுப்பறையின் முன் இருக்கை நியாபகங்கள்
புதுவை சென்று பங்கேற்ற நாடகங்கள்
உங்கள் அறை நுழைவுவாயிலில் அருகே பேசிய வார்த்தைகள்.
சீறி எழும் உன் பெண்ணியச் சிந்தனைகள்
எதிர்பாராத உன் வீட்டின் என் வருகை நிகழ்வுகள்
குழந்தை போல் சண்டையிட்டு . . . என்
கல்லூரி நினைவுச் சுவடியினிலே நீ நிழலிட மறுத்தது.
எத்தணை எத்தணையோ இன்னும்
என் நினைவுகளிள்.
"குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு"
"குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு"
வருட முடிவில் பிரிவோமெனத் தெரிந்தும்
பரிமாறிக் கொள்ளும் கல்லூரி நட்பு.
"பிரிவு உறவின் முறிவல்ல"
"நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை."

No comments: