உங்களின் மேலான கருத்துக்களையும் ஐயங்களையும் கேள்விகளையும் கீழேயுள்ள மின்அஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும். நன்றி.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com

Please contact the below E-Mail ID for your suggestions, questions, and doubts. Thank you.
E-Mail: (1) skarg_ind@hotmail.com (2) skargind@gmail.com


Sunday, December 25, 2011

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை‏

றிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!

ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?
"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )
 
அண்ணா காஞ்சி சட்டசபைத் தேர்தலில் முதன்முறையாக நின்றார். ஆனால் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். அவர் அண்ணாவிடம் வந்து, ‘I am sorry.’ என்றாராம்.
அண்ணா, ‘I am not a lorry to carry your sorry!’ என்றாராம்!

அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டசபையில் நடந்த சூடான விவாத்த்தில், எதிர்கட்சியைச் சேர்ந்தவர், கோபமாக அண்ணாவைப் பார்த்து:
‘Your days are numbered’
என்றார். அதாவது, நீங்கள் சீக்கிரம் ஆட்சியை விட்டு போகும் காலம் எண்ணப்படுகிறது என்றார்.
அண்ணா அதற்கு:
‘But our steps are counted’
என்றார். அதாவது எங்களது சாதனைகள் கவனிக்க்ப்படுகின்றன என்றார்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம் ஒரு காங்கிர்ஸ் கோட்டை. அங்கு அண்ணா மாணவர் மன்றத்தில் உரையாற்ற்ச்சென்றார்.
காங்கிர்ஸ் மாணவர்கள் அண்ணாவுக்கு ஆங்கிலம் வராது. அவரை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து, ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள் என்றனர்.
‘என்ன தலைப்பில்?’ என்று கேட்டார்.
’தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்றனர்.
அப்போது அண்ணா குழம்பி விடுவார். அல்லது தனக்கு இலகுவான ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் என நினைத்தனர்.
அண்ணா மேடையை நோக்கினார். பின்னர் கூட்டத்தை நோக்கினார். அப்பொது முன்வரிசையில் இருந்த ஒருவர் தீக்குட்சியக்கொழுத்தி, தன் சிகரெட்டைப் பற்ற வைத்தார்.
இதைக்கவனித்த அண்ணா:
‘Yes, SPARK is my topic today’ என்று தொடங்கி நெருப்பு என்ற தலைப்பில் ஆங்கில உரையாற்றி அமர்ந்தார். காங்கிரஸ் மாணாவர்கள் கரகோஷம் எழுப்பித்தானே ஆகவேண்டும்?
(இந்த் உரை அண்ணமலைப்பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் படிக்க)


இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். மொழியைச் சிதைத்துத் தான் வேற்றுமொழியில் புலமையடையலாம்  என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் தான் என்பது அறிஞர் அண்ணாவின் வாழ்வில் நடந்த இச்சம்பவங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து / சிதைத்து மட்டும் தான் ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவு என்பதை புரிந்து கொள்வார்களா?

No comments: