சூடு சொரணை கொஞ்சமுமில்ல சொல்லடா நீயா
தமிழனின் பிள்ளை
தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்குத்
தோரணம் ஆனது வாழை - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை
கூப்பிட்டுப் பதவி கொடுத்தப் பகைவனை
கும்பிட்டு வாய் பொத்தி நின்றாய் - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ - நீயும்
சாக்கடை நாய் போல தின்றாய்
தீயவர் தலையைச் சிறுக மறந்தாய் - உன்
தேசத்தைப் பாரடா நெருப்பு - அட
அமிர்தம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழிய நீ அல்லவா பொறுப்பு
என்றென்றும் உன் தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடியா பறக்கும்? - அட
நன்றாக நன்று இருந்து பார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்.
காசி ஆனந்தன்
தமிழனின் பிள்ளை
தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்குத்
தோரணம் ஆனது வாழை - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை
கூப்பிட்டுப் பதவி கொடுத்தப் பகைவனை
கும்பிட்டு வாய் பொத்தி நின்றாய் - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ - நீயும்
சாக்கடை நாய் போல தின்றாய்
தீயவர் தலையைச் சிறுக மறந்தாய் - உன்
தேசத்தைப் பாரடா நெருப்பு - அட
அமிர்தம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழிய நீ அல்லவா பொறுப்பு
என்றென்றும் உன் தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடியா பறக்கும்? - அட
நன்றாக நன்று இருந்து பார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்.
காசி ஆனந்தன்
No comments:
Post a Comment